Madurai army soldier killed terrorist attack in JK: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் பயங்கரவாதிகள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து போரிட்ட ராணுவ வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அதில் ஒருவர் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன், தமிழகத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
தேசத்தின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் எல்லையில் பயங்கரவாத தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் மரணமடைந்த சம்பவம் மதுரை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிக்கிறேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil