மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : பொங்கல் திருநாள் என்பது நாம் உண்ணும் உணவிற்கும், உணவை உருவாக்கித் தரும் விவசாயிகளுக்கும், அவர்களுக்கு ஆதாரமாய் இருக்கும் கால்நடைகளுக்கும், சூரிய பகவானுக்கும் நன்றி செலுத்தும் நன்னாள் தான்.
பொங்கல் என்றால் உடனே நம் அனைவரின் ஞாபகத்திற்கு வருவது தமிழகர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தான். அதுவும் மதுரையில் நடைபெறும் அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றவை.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - நிறைவடைந்தது முதல் சுற்று
இன்று காலை அவனியாபுரத்தில் கோலகலாமக துவங்கியது ஜல்லிக்கட்டு. மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தார். சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள சுமார் 691 காளைகளும், 500 மாடு பிடி வீரர்களும் வந்துள்ளனர்.
அரசின் ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு உதவியுடன், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே மாடுகள் களத்தில் இறக்கப்படுகின்றன.
முதல் சுற்று போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன. 81 காளைகள் வாடிவாசலில் இறக்கிவிடப்பட்டன. இந்த மாடுகளைப் பிடிக்க 75 வீரர்கள் களம் இறங்கினர். விளையாட்டில் பங்கேற்ற வீரர்களில் 3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க : தமிழர்களின் தனித்திருநாள் பொங்கல்