Advertisment

அவனியாபுரத்தில் இப்படித்தான் காளைகளை அவிழ்க்கனும்... போலீஸ் போட்ட ரூல்ஸ்

காளைகளை அழைத்து வரும் உரிமையாளருடன் ஒரு நபர், சரியாக காலை 05.00 மணிக்கு திருப்பரங்குன்றம் ரோடு முல்லை நகரில் உள்ள அனுமதிக்கப்படும் இடத்தில் தங்களது காளைகளை வரிசைப்படுத்தி முறையாக கொண்டு வர வேண்டும்.

author-image
WebDesk
New Update
Madurai Avaniyapuram Jallikattu police rules Tamil News

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 1100 காளைகள் அவிழ்த்து விடப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை யையொட்டி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிர மடைந்துள்ளன வாடிவாசல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வரும் காளைகளின் உரிமையாளர்களுக்கு மதுரை போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

Advertisment

காளைகளை அழைத்து வரும் உரிமையாளருடன் ஒரு நபர், சரியாக காலை 05.00 மணிக்கு திருப்பரங்குன்றம் ரோடு முல்லை நகரில் உள்ள அனுமதிக்கப்படும் இடத்தில் தங்களது காளைகளை வரிசைப்படுத்தி முறையாக கொண்டு வர வேண்டும்.

100 வரையிலான டோக்கள் பெற்றவர்கள் காலை 05.00 மணி முதல் 06:00 மணிக்குள் அனுமதிக்கப்படுவர். 101 முதல் 200 வரை டோக்கன் உள்ளவர்கள் காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரையிலும், 201 முதல் 300 வரையிலான டோக்கன் பெற்றவர்கள் காலை 07.00 முதல் 08.00 மணி வரையிலும், 301 முதல் 400 வரையிலான டோக்கன் பெற்றவர்கள் தங்களது காளைகளை 08.00 வரையிலும் அனுமதிக்கப்படுவர்.

தொடர்ந்து, 401 முதல் 500 வரையிலான டோக்கன் பெற்றவர்கள் தங்களது காளைகளை 09.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், 501 முதல் 600 வரையிலான டோக்கன் பெற்றவர்கள் தங்களது காளைகளை 10.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், 601 முதல் 700 வரையிலான டோக்கன் பெற்றவர்கள் தங்களது காளைகளை 11.00 மணிமுதல் 12.00 மணி வரையிலும் , 701 முதல் 800 வரையிலான டோக் கன் பெற்றவர்கள் தங்களது காளைகளை மதியம் 12.00 மணி முதல் 01.00 மணி வரையிலும் அனுமதிக்கப்படுவர்.

Advertisment
Advertisement

801 முதல் 900 வரையிலான டோக்கன் பெற்றவர்கள் தங்களது காளைகளை மதி யம் 01.00 மணி முதல் 02.00 மணி வரையிலும், 901 முதல் 1000 வரையி லான டோக்கன் பெற்றவர் கள் தங்களது காளைகளை 02.00 முதல் 03.00 மணிவரையிலும், 1001 முதல் 1100 வரையிலான டோக்கன் பெற்றவர்கள் தங்களது காளைகளை 03.00 மணி முதல் 04.00 மணி வரையிலும் அனும திக்கப்படுவர். 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு தங்களது காளைகளை கொண்டு வருபவர்கள் மாவட்டநிர்வாகத்தால் வழங்கப்பட்ட அனுமதி டோக்கன்கள் மற்றும் காளை உரிமையாளர்களின் ஆதார் அடையாள அட்டையை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அதை காவல்துறை மற்றும் கால்நடைதுறையும் இணைந்து கியூ.ஆர் கோடு மூலம் ஆய்வு செய்த பின்னரே அனுமதிக்கப்படுவர். 

போலியான டோக்கன்களை பயன்படுத்தி நுழைய முற்படும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காளையுடன் வரக்கூடிய 2 நபர்களும் மது அருந்தி வரக்கூடாது. மது அருந்தி வருபவர்கள் எக்காரணம் கொண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படடார்கள். 

வெளியூரிலிருந்து அவ னியாபுரம் ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து காளைகளை வரிசைப்படுத்தி நிறுத்த வேண்டும். அதுவரை தாங்கள் அழைத்து வரும் காளைகளை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் ஓர மாக கட்டி வைத்து பாதுகாக்க வேண்டும்.

வாடிவாசல் வழியே முறையாக அவிழ்த்து விடப்படும் காளைகளை செம்பூரணி ரோடு தண்ணீர் தொட்டி அருகே அமைக் கப்பட்டுள்ள காளைகளை பிடிப்பதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்து தங்களது காளைகளை பாதுகாப்பாக எந்த வித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் பிடித்து செல்ல வேண்டும். மேலும் பொது மக்கள் யாரும் எவ்விதமான அசட்டையான செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்றும் போலீசார் அறிவித்துள்ளனர்.

 

Madurai Jallikattu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment