45 மருத்துவர்கள் மற்றும் 7 குழுக்களுடன் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
/indian-express-tamil/media/post_attachments/1bd38d4e-b7a.jpg)
/indian-express-tamil/media/post_attachments/b9470cad-378.jpg)
பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரையில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு பெற்றதாக நடைபெறுகிறது. இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரும் பொங்கல் அன்று நடைபெற இருக்கிறது.
/indian-express-tamil/media/post_attachments/0c4c79b2-e7b.jpg)
/indian-express-tamil/media/post_attachments/e91a5529-b3c.jpg)
இதற்கான முன்னேற்பாடாக பார்வையாளர் மாடம் அமைத்தல், வாடிவாசல் அமைத்தல் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் இடங்கள், காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்ட இடங்களுக்கு மூங்கில் மற்றும் இரும்பு தடுப்பு வேலி கொண்டு அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக அவனியாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/f5807393-e46.jpg)
இந்த ஜல்லிக்கட்டில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் கட்டின் போது காளைகள் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக 45 கால்நடை மருத்துவர்களைக் கொண்ட 7 குழுவை அமைத்து கால்நடை பராமரிப்புத்துறையின் மதுரை மண்டல இணை இயக்குநர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/9b21fc02-9ab.jpg)
ஜல்லிக்கட்டு காளைகள் நிறுத்தி வைக்கும் பகுதியில் 7 கால்நடை மருத்துவர்களைக் கொண்ட 2 குழுக்கள், காளைகளுக்கான மருத்துவ பரிசோதனைக்காக 16 பேரைக் கொண்ட 5 குழுக்கள், வாடிவாசல் கண்காணிப்பிற்காக திருப்பரங்குன்றம் கால்நடை மருந்தக உதவி இயக்குநர் தலைமையில் ஒரு கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் தலைமையில் ஒரு குழுவும், ஜல்லிக்கட்டு அரங்கு கண்காணிப்பு பணியில் சேடபட்டி கால்நடை மருத்துவமனையின் கால்நடை மருத்துவர் தலைமையில் ஒரு குழு, ஜல்லிக்கட்டு காளைகள் சேகரிக்கும் இடத்தில் திருமங்கலம் கால்நடை மருத்துவமனை கால்நடை மருத்துவர் தலைமையில் ஒரு குழு, அவசரகால பணிக்காக 3 குழுக்கள், அவசர ஊர்தி சிறப்பு பணியில் மதுரை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்து ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.
/indian-express-tamil/media/post_attachments/e1050954-0bc.jpg)
ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் கால்நடை அவசர ஊர்தி மற்றும் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்ட அவசர சிகிச்சை ஊர்தி வாகனங்கள் மற்றும் மேலூர், தல்லாகுளம் நடமாடும் கால்நடை மருந்தக பிரிவுகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கால்நடை அவசர ஊர்தியில் காளைகளை சிறப்பு பரிசோதனை செய்ய உரிய சோதனை கருவிகளுடன் தங்களின் பணியாளர்களுடன் பங்கேற்க வேண்டும். மதுரை, கால்நடை பன்முக மருத்துவனை தரப்பில் அவசர மருத்துவ சேவையை வழங்க வேண்டும். நிகழ்ச்சி முடிந்ததும் அதன் அறிக்கையை மாவட்ட கலெக்டர் மற்றும் மண்டல இணை இயக்குனருக்கு மதுரை கோட்ட உதவி இயக்குநர் வழங்க வேண்டும். இவ்வாறு கால்நடை பராமரிப்பு துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.