/indian-express-tamil/media/media_files/2025/01/14/yo0pD2AjcZQwXgvsRltR.jpg)
சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காட்டைச் சேர்ந்த முத்துக்காளை, ரவிமணிமாறன் பிரதர்ஸ்-ன் காளையை அடக்கினால் ரூ. 1 லட்சம் பரிசு என அறிவிக்கப்பட்டது. பாய்ந்து பிடித்து அடக்கிய ரஞ்சித் என்ற வீரருக்கு, களத்திலேயே பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
தைப்பொங்கல் திருநாளை ஒட்டி, இன்று செவ்வாய்க்கிழமை மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், முதலிடம் பிடிக்கு மாடுபிடி வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
காலை 7 மணிக்கு போட்டி தொடங்கி நிலையில், முதலில் கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதனை தொடர்ந்து வாடிவாசலில் சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்து வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளாக காளைகள் அவித்துவிடப்படுகின்றன. ஒவ்வொரு சுற்றுக்கும் கலர் கலர் வண்ண டி-சர்ட்களை அணிந்து களத்தில் இறங்கி வருகின்றனர்.
ஒவ்வொரு காளை அவிழ்த்து விடும்போதும் 2 சக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா போன்ற பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அளிக்கப்படுகின்றன.தற்போது வரை 8 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. தற்போது 9வது சுற்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காட்டைச் சேர்ந்த முத்துக்காளை, ரவிமணிமாறன் பிரதர்ஸ்-ன் காளையை அடக்கினால் ரூ.1 லட்சம் மற்றும் 2 தங்க காசுகள் பரிசு என அறிவிக்கப்பட்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் அந்த மாட்டை அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித் என்ற மாடுபிடி வீரர் பாய்ந்து பிடித்தார். இதனையடுத்து களத்திலேயே ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் 2 தங்க காசுகள் அமைச்சர் மூர்த்தியின் கையால் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் காளையை அடக்கி ஒரு லட்ச ரூபாய் பரிசு பெற்ற அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித் காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Watch | “தங்கத்த தூக்கிட்டு வாங்க பா..”
— Sun News (@sunnewstamil) January 14, 2025
சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காட்டைச் சேர்ந்த முத்துக்காளை, ரவிமணிமாறன் பிரதர்ஸ்-ன் காளையை அடக்கினால் ₹1 லட்சம் பரிசு என அறிவிக்கப்பட்டது.
பாய்ந்து பிடித்து அடக்கிய ரஞ்சித் என்ற வீரருக்கு, களத்திலேயே ₹1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.… pic.twitter.com/5erdblpM24
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.