/indian-express-tamil/media/media_files/2025/08/19/madurai-high-court-2025-08-19-07-26-40.jpg)
கரூரில் நடைபெற்ற த.வெ.க கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் பலியாகி நாடு முழுவதும் துயரலை பரவவைத்துள்ளது.
கரூரில் நடைபெற்ற த.வெ.க கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் பலியாகி நாடு முழுவதும் துயரலை பரவவைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மதுரை மானகரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், இ-மெயில் மூலமாக தாக்கல் செய்த மனுவில், “தவெக கூட்டத்திற்கு சுமார் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் நெரிசலான இடத்தில் கூடியிருந்தனர். அலட்சியம் மற்றும் தவறான நிர்வாகத்தால் சட்டப்பூர்வ அனுமதிகள் மீறப்பட்டதால், 40-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், உயிரிழப்பிற்கு காரணமான தமிழக வெற்றிக்கழகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்,” எனக் கோரியுள்ளார்.
இதையடுத்து, சிவகங்கை மாவட்டம் ஆளவந்தான்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகேசனும் தனி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “கரூர் துயர சம்பவத்திற்கு காரணமான நடிகர் விஜய் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனக் கோரப்பட்டுள்ளது.
இதேபோல் மேலும் பலரும் மனுக்கள் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மனுக்கள் இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுக்கப்படும் என ஐகோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.