தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோத பேனர், பிளக்ஸ் போர்டு: மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Madurai bench of Madras High Court orders action against illegal banners billboards across TN Tamil News

தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சாலை விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அருளரசன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியம், அருள் முருகன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பினரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், “பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்றுவது வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள், போலீசாரின் கடமை. இதற்காக நீதிமன்றத்தில் வருவது ஏற்றுக்கொள்ள முடியாது. கடமையை செய்ய தவறும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேனர், பிளக்ஸ் போர்டுகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்கள் அதிகாரிகளாக இருப்பார்கள்” என தெரிவித்தனர்.

உடனடியாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்றி, தொடர்புடைய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Madurai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: