/indian-express-tamil/media/media_files/LHuQ6UwlFSkWr6e0zmGx.jpg)
கஞ்சா பொட்டலத்துடன் ஸ்டாலினிடம் மனு: பா.ஜ.க ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டியன் சிறையில் அடைப்பு!
Cm Mk Stalin | Madurai | Tamilnadu Bjp:தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டான் ஓய்வுக்காக தனது குடும்பத்துடன் நேற்று திங்கள்கிழமை கொடைக்கானல் புறப்பட்டு சென்றார். சென்னையில் வீட்டில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை விமான நிலையம் சென்றடைந்தார். இந்நிலையில், விமான நிலையத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் வெளியே வந்தபோது பா.ஜ.க ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டியன் கஞ்சா பொட்டலத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளிக்க முயன்றுள்ளார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பா.ஜ.க நிர்வாகியை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சங்கர் பாண்டியனை காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் வந்ததாக பா.ஜ.க நிர்வாகி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கரபாண்டியன் கையில் இருந்த கடிதத்தில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களும் எளிதில் கிடைக்கிறது. இதனால் இளைஞர்கள், மாணவர்கள், கூலி தொழிலாளர்கள், சிறுவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள்.
இதனால், தமிழகத்தில் சட்ட விரோத செயல்கள் குற்றசெயல் அதிகரித்து வருகிறது. இது மிகவும் எனக்கு வேதனை அளிக்கிறது. ஆகவே தாங்கள் தமிழக மக்கள் நலன் கருதி துரிதமாக நடவடிக்கை எடுத்து போதை பொருட்கள் பழக்கத்தை தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக கடிதத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு கொடுக்க முயன்ற பா.ஜ.க நிர்வாகி சங்கர் பாண்டியன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.