Tamilnadu finance minister PTR Palanivel Thiaga Rajan Tamil News: ஜம்மு காஷ்மீரில் முகாமிற்குள் நுழைந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களில் ஒருவர் மதுரை மாவட்டம் டி. புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன். மற்ற இரு வீரர்கள் ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது . மறைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
வீர மரணமடைந்த லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து மரியாதை செலுத்தி விட்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரில் ஏறி சென்ற போது, அங்கே நின்று கொண்டிருந்த பாஜகவினர் கோஷமிட்டு கொண்டு அமைச்சர் கார் மீது செருப்பை வீசியுள்ளனர்.

இதுகுறித்து விசாரித்த போது இறந்த ராணுவ வீரர் உடலுக்கு பாஜக சார்பில் முதலில் மரியாதை செலுத்தப்படும் என கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு அமைச்சர் பிடிஆர் அரசு சார்பில் மரியாதை செலுத்திய பிறகு மரியாதை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதில் அதிருப்தியடைந்த பாஜகவினர் அமைச்சர் காரை முற்றுகையிட்டு செருப்பை வீசியுள்ளனர். அமைச்சர் மீது நடத்தப்பட்ட இச்சம்பவம் மதுரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#WATCH || வீடியோ: அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது செருப்பு வீச்சு: மதுரையில் பா.ஜ.க-வினர் திடீர் தாக்குதல்https://t.co/gkgoZMIuaK | #Palanivelthiagarajan | #PTR pic.twitter.com/n3czqaqlQE
— Indian Express Tamil (@IeTamil) August 13, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil