Tamilnadu-bjp | madurai | aiadmk | annamalai | edappadi-k-palaniswami | sellur-raju: எதிர்வரும் 2024 பொதுத்தேர்தலை ஒட்டி தேசிய - மாநில கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. பிற மாநிலங்களில் பா.ஜ.க கூட்டணி அமைப்பது போலவே, தமிழகத்திலும் ஒரு வலுவான பெரிய கட்சியுடன் கூட்டணி அமைக்கிறது. கடந்த வாரத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க தலைவருமான அமித் ஷா அ.தி.மு.க தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியை டெல்லியில் சந்தித்தார். அப்போது பா.ஜ.க-வுக்கு 15 இடங்கள் வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், மாநிலத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் முதல்வர்களான அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதாவை கடுமையாக தாக்கி பேசினார். அதற்கு அ.தி.மு.க அமைச்சர்கள் பதிலடி கொடுத்து, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள்.
மதுரை பா.ஜ.க நிர்வாகிகளை வளைத்துப் போட்ட அ.தி.மு.க
இந்நிலையில், மதுரை மாவட்ட முக்கிய பா.ஜ.க நிர்வாகிகள் அ.தி.மு.க-வில் இணைந்துள்ளனர். இது தலைவர் அண்ணாமலைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல், பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் பாரி உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கோரிப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய மாநகர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்திற்கு வந்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/7edcf5d1-62f.jpg)
தொடர்ந்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை சந்தித்த அவர்கள் தங்களை அ.தி.மு.க-வில் இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு பொன்னாடை போத்தி கவுரவுவித்து ராஜூ வாழ்த்து தெரிவித்தார். அதோடு, பா.ஜ.க-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்த நிர்வாகிகளின் வாகனங்களில் அ.தி.மு.க கொடியை செல்லூர் ராஜூ பொருத்தினார்.
/indian-express-tamil/media/post_attachments/3b7c0252-21e.jpg)
இதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பா.ஜ.க-விற்கும் எங்களுக்கும் பிரச்னை உள்ளது என யாராவது பேசி இருக்கிறோமா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், 'மாநில தலைவர் அண்ணாமலை அறிஞர் அண்ணாவைப் பற்றி சொன்ன விதம் தவறு கூறினோம். எங்களை நட்டா ஜி, அமித்ஷா ஜி, மோடி ஜி, மதிக்கிறார்கள். அது போதும். நாங்களும் மோடிஜி தான் பிரதமராக வேண்டும் என சொல்கிறோம்' என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“