/indian-express-tamil/media/media_files/2025/04/15/lhVdlVtcjSTDWo84RzrO.jpg)
Madurai bomb threat, Meenakshi Amman Temple Thiruparankundram Murugan Temple
மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோயிலும், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலும், அதன் அருகே மலைமேல் இருக்கும் தர்காவிற்கும் இன்று ஈமெயில் (email) மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த மிரட்டல் தகவல் கிடைத்தவுடனேயே, போலீசார் எந்தவித தாமதமுமின்றி உடனடியாக அந்தந்த கோவில்களுக்கும், தர்காவிற்கும் விரைந்து சென்றனர். அங்கு மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு படையினரின் உதவியுடன் தீவிரமான சோதனையில் ஈடுபட்டனர்.
மீனாட்சியம்மன் கோயில் வளாகம், முருகன் கோயில் மற்றும் தர்கா வளாகம் உட்பட சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் முழுமையாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் எந்தவித வெடிகுண்டு பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், இந்த வெடிகுண்டு மிரட்டல் ஈமெயில் ‘புரளி’ (False Alarm) என்பது உறுதி செய்யப்பட்டது. மிரட்டல் ஈமெயில் அனுப்பிய நபரைக் கண்டறியும் பணியில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.