இந்தியாவின் முதல் தனியார் போக்குவரத்து ரயிலான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில், மேஜிக்பாக்ஸ் என்ற புதிய பொழுதுபோக்கு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தேஜாஸ் ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கு இயக்கப்படுகிறது. வியாழக்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இந்த தேஜாஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பிரீமியம் ரக ரயிலான இதில் பயணிகளின் இருக்கையில் சிறிய டிவி டிஸ்பிளே அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய டிவி டிஸ்பிளேகள் பல நேரங்களில் சரிவரச் செயல்படுவதில்லை எனப் பயணிகளிடம் இருந்து புகார்கள் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேஜாஸ் நிறுவனம் இருக்கையிலிருந்த டிவி டிஸ்பிளேகளை நீக்கம் செய்ய உத்தரவிட்டு, அதை நீக்கமும் செய்துள்ளது. நீக்கம் செய்யப்பட்ட பின் இன்னும் சில பயணிகள் பொழுதுபோக்கிற்கான அம்சம் தேவை என்று புகார் அளித்துள்ளனர்.
பயணிகளின் தேவைக்கு ஏற்றார் போல் அவர்களுக்கு விருப்பமான பொழுதுபோக்கு அம்ஸங்களை தங்களின் ஸ்மார்ட்போன், லேப்டாப்களில் கண்டுகளிக்கும் வகையில் அனைவருக்கும் வைஃபை சேவையை வழங்க முடிவு செய்துள்ளது.
மேஜிக் பாக்ஸ் வைஃபை நெட்வொர்க்கில் பயணிகள் தங்களின் சாதனங்களை கனெக்ட் செய்து தங்களுக்கு விருப்பமான பொழுதுபோக்கு அம்சத்தைக் கண்டுகளிக்கலாம். இந்த வைஃபை சேவையுடன் பயணிகள் தங்களை இணைத்துக்கொள்ளப் பயணி விபரங்களைப் பதிவு செய்தால் மட்டும் போதுமானது.
மேஜிக் பாக்ஸ் வசதியில் பயணநேரத்தின்போது 500 மணி நேரம் வரை கண்டுகளிக்கக் கூடிய அனைத்து மொழி திரைப்படங்கள் பாடல்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு கார்டூன் நிகழ்ச்சிகளும் இந்த சேவையின் கீழ் அணுகக் கிடைக்கிறது. அதில் விருப்பமானவற்றைப் பயணிகள் தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேஜிக்பாக்ஸ் சேவையை பெறும் வழிமுறை
மேஜிக்பாக்ஸ் வைபை நெட்வொர்க் உடன் கனெக்ட் செய்வதற்கு முன், உங்கள் மொபைல் டேட்டாவை ஆப் செய்துகொள்ளவும்
வைபை நெட்வொர்க்கை தெரிவு செய்யவும்
மேஜிக் பாக்ஸை தெரிவுசெய்து கனெக்ட் செய்து கொள்ளவும்
ஷபாரி உள்ளிட்ட சர்ச் இஞ்ஜினை ஓபன் செய்யவும்
மேஜிக்பாக்ஸ்.காம் என்று டைப் செய்யவும்
அதில் உங்கள் பெயர், மொபைல் எண் கொடுத்து பதிவு செய்து கொள்ளவும்
விளம்பரம் இல்லா நிகழ்ச்சிகளை கண்டுகளித்து பயணத்தை இனிமையான தருணமாக மாற்றிக்கொள்ளவும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.