scorecardresearch

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்.. கூட்ட நெரிசலில் சிக்கி 24 பேர் காயம்.. 2 பேர் உயிரிழப்பு!

தொடர்ந்து மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபம் இன்று அதிகாலை நடந்தது.

Madurai chithirai festival
Madurai chithirai festival 24 injured 2 people dead in a crowd surge

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஏப்.14 அன்று விமரிசையாக நடந்தது. திருவிழாவின் 11-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபம் இன்று அதிகாலை நடந்தது. இதைக் காண, தல்லாகுளம் முதல் ஆழ்வார்புரம் வரையிலும்’ வைகையாற்றின் கரைகளிலும் லட்சகணக்கான மக்கள் கூடினர்.

கொரோனா தொற்று காரணமாக, இரு ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருவதைக் காண, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் மதுரைக்கு வந்தனர்.

இப்படி மக்கள் வெள்ளம் சூழ, கள்ளழகர் பச்சைப் பட்டுடுத்தி, தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார். வண்டியூர் வீரராகவப் பெருமாள் கள்ளழகரை வரவேற்றார்.

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை பார்த்த பக்தர்கள் கோவிந்தா கோஷமிட்டும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தரிசனம் செய்தனர்.

இதனிடையே’ கள்ளழகரை காண ஒரே நேரத்தில் லட்சகணக்கான மக்கள் ஒரே இடத்தில் திரண்டதால், கூட்ட நெரிசல் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு மொத்தம் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், எதிர்பாராதவிதமாக’ 40 வயது ஆண், 60 வயது மதிக்கத்தக்க பெண் என 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடனும், 7 பேர் சாதரண காயங்களுடன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே உயிரிழந்தவர்களின்  குடும்பத்துக்கு தலா 5 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு 2 லட்சம், சாதரண காயமடைடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் என முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி காணாமல் போனவர்கள் குறித்து தகவல் அறிய மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலரை 94980 42434 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Madurai chithirai festival 24 injured 2 people dead in a crowd surge

Best of Express