தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் சென்னை தொழில் வர்த்தக சபை இணைந்து, 'பசுமை விமான நிலையம்: தமிழகத்தின் விரைவான வளர்ச்சிக்கான முயற்சி' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தினர்.
இதில், அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "
கடந்த ஒன்றரை ஆண்டில், நாட்டிலேயே 9 சதவீதம் வளர்ச்சியுடன், தமிழகம் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக நிற்கிறது.
இதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருந்து 8.27 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு முடிவு செய்துள்ளோம். இதனால், ஏற்றுமதிக்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை இங்கு நிலவுகிறது.
நம் தமிழ்நாட்டின் பொருளாதார இலக்கை அடைய சென்னையில் இரண்டாவது புதிய விமான நிலையம் வருவது அவசியமானதாகிறது. சென்னையில் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைப்பதற்கு, ஆரம்பத்தில் 11 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதியில் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
விமானத்தை பராமரிக்கும் பணிகள் உட்பட, அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்க திட்டமிடப்படுகிறது.
சென்னையில் புதிய விமான நிலையம் அமையும் போது, அதோடு கோயம்பத்தூர், திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய ஊர்களில் உள்ள விமான நிலையங்களும் விரிவாக்கம் செய்யப்படும்", என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil