மதுரையில் 3 தினங்களுக்கு மதுபான கடைகளை மூட மதுரை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27.10.2024 - மருதுபாண்டியர் நினைவுநாள் விழா மற்றும் 29.10.2024, 30.10.2024 - பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி- குருபூஜையினையொட்டி மூன்று தினங்கள் மதுபானக் கடைகள் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
27.10.2014 அன்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மருதுபாண்டியர் நினைவுதினத்தை முன்னிட்டும், 29.10.2024,30.10.2024 ஆகிய நாட்களில் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை தினவிழாவை முன்னிட்டும், மதுரை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு 27.10.2024 (மாலை 07.00 மணி வரை மட்டும்), மற்றும் 29.10.2024, 30.10.2024 ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் மதுரை (FL1/FL2/FL3/FL3A/FL4A/FL11) ஆகிய உரிமம் பெற்றுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள், படைவீரர்கள் கேண்டீன் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மூடப்பட்டு இருக்கும்.
மேற்படி தினங்களில் மது விற்பனை தொடர்பான விதி மீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி தினங்களில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது எனத் தெரிவிக்கப்படுகிறது என மதுரை மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“