மாநகராட்சி வரி வசூல் மையங்கள் பிப்ரவரி, மார்ச்சில் ஞாயிற்றுக் கிழமையும் செயல்படும் என மதுரை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: மாநகராட்சிப் பகுதிகளில் வசூலிக்கப்படும் சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பராமரிப்புக் கட்டணம் ஆகிய வரி வருவாய் இனங்கள் மூலமும், வரியில்லாத வருவாய் இனங்கள் மூலமும் அடிப்படை வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த வரி இனங்களைச் செலுத்தாதோர் உடனடியாகச் செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும். மேலும், 2025 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் கணினி வரி வசூல் மையங்கள் செயல்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்களின் வாடகைத் தொகை ஆகியவற்றை உடனடியாகச் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனத் தெரிவித்துள்ளார்.