/indian-express-tamil/media/media_files/2025/06/24/madurai-corp-meeting-2025-06-24-23-01-44.jpg)
மதுரை மாநகராட்சி 10வது கவுன்சிலர் கூட்டத்தில் தெருவழிப் பெயர்களில் சாதிப் பெயர்கள் நீக்கம் குறித்து தீவிர விவாதம் நடைபெற்றது. Photograph: (Image Source: x/ @Indirani_Mayor)
மதுரை மாநகராட்சி 10வது கவுன்சிலர் கூட்டத்தில் தெருவழிப் பெயர்களில் சாதிப் பெயர்கள் நீக்கம் குறித்து தீவிர விவாதம் நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாமன்ற உறுப்பினர் இன்குலாப் முனியாண்டி பேசும் போது, “மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் சாதிப் பெயர்கள் நீக்கப்பட வேண்டும். இதற்கான ஐகோர்ட் உத்தரவு ஏற்பதாகவும், அந்தந்த பகுதி பொதுமக்களுடன் ஆலோசனை செய்து, பூக்களின் பெயர் அல்லது பெருமைக்குரிய தலைவர்களின் பெயர்கள் மாற்றாக வைக்க வேண்டும்” எனக் கோரினார்.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா மறுப்புத் தெரிவித்து, “தெருப்பெயர்களை மாற்ற வேண்டாம், தற்போதைய பெயர்களே தொடரட்டும்,” என்றார். இதனால் மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் பேசும் போது, “எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு விளக்குகள் சரியாக எரியவில்லை. மின் மயான பராமரிப்பு குறைபாடும் உள்ளது. மாநகராட்சி குப்பை வண்டிகள் பழுதடைந்துள்ளதால் அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும்,” என்றார்.
மேலும், 36வது வார்டைச் சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர் கார்த்திகேயன், “எக்கோ பார்க் பகுதியில் பள்ளங்கள் இருப்பதை பலமுறை மாமன்ற கூட்டங்களில் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை,” எனக் குறை தெரிவித்தார்.
மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்திறனைப் பொருத்தும் வகையில் இந்தக் கூட்டத்தில் பல முக்கிய கோரிக்கைகள் மற்றும் பிழைச்சுட்டல்கள் முன்வைக்கப்பட்டன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.