மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: மேயர் இந்திராணி ராஜினாமா; அக்.17-ல் புதிய மேயர் தேர்வு

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி தாக்கல் செய்வதில் ஏற்பட்ட பெரும் முறைகேடு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மேயர் இந்திராணி ராஜினாமா செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சியின் புதிய மேயர் தேர்வு அக்.17-ம் தேதி நடைபெற உள்ளது.

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி தாக்கல் செய்வதில் ஏற்பட்ட பெரும் முறைகேடு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மேயர் இந்திராணி ராஜினாமா செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சியின் புதிய மேயர் தேர்வு அக்.17-ம் தேதி நடைபெற உள்ளது.

author-image
WebDesk
New Update
Mayor Indrani 3

மதுரை மாநகராட்சியின் புதிய மேயர் தேர்வு அக்.17-ம் தேதி நடைபெற உள்ளது.

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் சொத்து வரி பதிவு மற்றும் திருத்தங்களில் முறைகேடு நடந்ததாக தொடர்ச்சியான புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு (சி.சி.பி) போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஓய்வுபெற்ற உதவி கமிஷனர் ரெங்கராஜன், உதவி வருவாய் ஆய்வாளர், உதவி ஆணையர், அலுவலர்கள் மற்றும் சில புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

Madurai mayor indrani 2

மேலும், மாநகராட்சி இணையதள பாஸ்வேர்டை தவறாக பயன்படுத்தியதாக மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். விசாரணையின் போது, சில திமுக மண்டலத் தலைவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கும் தொடர்பு உள்ளதாக போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து, அமைச்சர்கள் கே. என். நேரு மற்றும் மூர்த்தி ஆகியோர் மேயர், மண்டலத் தலைவர்கள் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Madurai mayor indrani 2

சொத்து வரி ஊழல் விவகாரம் தீவிரமாகி, திமுக உயர் தலைமையும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்திய நிலையில், மேயர் இந்திராணி தனது பதவியிலிருந்து விலகல் கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் சமர்ப்பித்தார்.

Madurai mayor indrani 2

இது தொடர்பான அவசர கவுன்சில் கூட்டம் துணை மேயர் நாகராஜன் தலைமையில் அக்.17 அன்று நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் ராஜினாமா ஏற்கப்பட்டால், அதே நாளில் புதிய மேயர் தேர்வு செய்யப்படும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment
Advertisements
Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: