/tamil-ie/media/media_files/uploads/2022/05/madurai-sanitary-workers.jpg)
Madurai Corporation sanitary workers strikes leads to storing waste in roads: மதுரை மாநகராட்சியில் சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், 850 டன் குப்பை தேக்கமடைந்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் 4,500 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் 1,500 க்கும் மேற்பட்ட பொறியியல் பிரிவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணி மற்றும் குடிநீர் விநியோகப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மதுரை மேலவாசலில் உள்ள தூய்மை பணியாளர் குடியிருப்பு வளாகத்தில், 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்கம் என 3 சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பணப் பலன்களை வழங்க வேண்டும், கொரோனா நிவாரண தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு தின ஊதியம் 625 ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: 959 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்; காவல்துறை அதிரடி
மேலும், தூய்மை பணியாளர்கள் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் உத்தரவை கைவிட வேண்டும், விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு காரணமாக அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலை நிறுத்தம் தொடர்பாக 3 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து தற்போது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதனிடையே மதுரை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் 850 டன் அளவில் குப்பைகள் தேக்கமடைந்து உள்ளது, இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மணி, மதுரை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.