மதுரை வெள்ளநீரியிலிருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு மதுரை மாநகராட்சி துரிதமாக செயல்பட்டு வருகிறது.
மதுரையில் இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக நகரின் தாழ்வான பகுதியில் மழை நீர் புகுந்து பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிய நிலையில், தண்ணீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தது. இதில் செல்லூர் கண்மாயில் இருந்து வெளியேறிய உபரி நீர் அப்பகுதியில் சூழ்ந்த நிலையில் அதனை உடனடியாக வெளியேற்ற கால்வாய் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது.
இந்நிலையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி மேற்பார்வையில், செல்லூர் கண்மாய் நீரினை புதிய வாய்க்கால் ஏற்படுத்தி வைகை ஆற்றில் சேர்க்கும் பணி நள்ளிரவு 12 மணியளவில் வெற்றிகரமாக முடிவுற்று செல்லூர் கண்மாயில் இருந்து நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“