மதுரை மாநகராட்சி, நகரின் தூய்மையை உறுதி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாட்டுத்தாவணி, உலகனேரி, ஐகோர்ட் மதுரை கிளை, சாலையோரம், நீர்நிலைகள் மற்றும் திறந்த வெளி கால்வாய்கள் போன்ற இடங்களில் குப்பை கொட்டும் நபர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படுமென எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, அவ்வாறு உள்ள இடங்களில் கழிவு பொருட்களை கொட்டினால், அதிகபட்சமாக ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும், குப்பை கொட்டிய 24 மணிநேரத்திற்குள் அதை அகற்ற வேண்டும் எனவும், இல்லையெனில் மேலும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மாநகராட்சி அறிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சி எடுத்துள்ள இந்த தீர்மானம், நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மிக முக்கியமான நடவடிக்கையாகும். பொதுமக்கள் இதனை உணர்ந்து, நகரின் சுத்தம் மற்றும் பொது சுகாதாரத்தை பேண உதவ வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.