பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் -ஸின் பிரச்சார பீரங்கியாகவே செயல்படுகிறார் என்று மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராசா விமர்சனம் செய்துள்ளார்.
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24-வது அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், தேசிய செயலாளர் டி.ராசா உட்பட கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த மாநாட்டை ஒட்டி அவர்கள் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். மதுரை விமான நிலையம் வந்த அவர்களுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி. ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டி. ராசா பேசுகையில், பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் -ஸின் பிரச்சார பீரங்கியாகவே செயல்படுகிறார் என்று விமர்சித்துள்ளார்.