/indian-express-tamil/media/media_files/2024/12/28/wQ6TDVGJLdgaKfrdgC1W.jpg)
மதுரையில் மோசடி வழக்கில் சொத்துக்களை ஏலம் விடும் விவகாரத்தில் ரூ.1.65 லட்சம் பெற்றதாக எழுந்த புகாரில், பெண் துணை தாசில்தார் தனபாண்டி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர்.
மதுரையில் தனியார், நிறுவனம் ஒன்றின் நிதி மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் செய்தனர். அந்நிறுவனத்தின் உரிமையாளர், தனது இரு சொத்துக்களை இளங்கோ, பழனியப்பன் என்பவர்களுக்கு விற்றுள்ளார்.
இதை அறிந்த முதலீட்டாளர்கள், 'மோசடி பணத்தில் வாங்கிய சொத்துக்களை இருவருக்கும் விற்றது தவறு.
அச்சொத்துகளை ஏலம் விட்டு எங்களது முதலீட்டு தொகையை திருப்பி ஒப்படைக்க வேண்டும்' என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஏலம் விட டி.ஆர்.ஓ.,வுக்கு கோர்ட் அறிவுறுத்தியது. அப்போது டி.ஆர்.ஓ., அலுவலக தலைமை அலுவலராக இருந்த தனபாண்டி (தற்போது தேர்தல் பிரிவு துணை தாசில்தார்) ஏலம் விடாமல் கிடப்பில் போட ரூ.1.65 லட்சம் லஞ்சம் பெற்றதாக லஞ்சஒழிப்பு போலீசாருக்கு புகார் அனுப்பப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் லஞ்சம் பெற்றதற்கான முகாந்திரம் இருப்பதை அறிந்து தனபாண்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நேற்று காலை மாட்டுத்தாவணி பொன்மேனி கார்டனில் உள்ள தனபாண்டி வீட்டில் டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்பிரபு, பாரதிப்ரியா உள்ளிட்டோர் சோதனை செய்து சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.