மதுரை மாவட்டத்தில் நேற்று இரவில் துவங்கி பரவலாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், கள்ளிக்குடியில் அதிகபட்சமாக 16.8 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் குறைந்த அளவாக எழுமலையில் 2.8 மி.மீ மழை பெய்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 7 மணி வரை 18 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் இரவில் துவங்கி காலை வரை பரவலாக மழை பெய்தது. இதன்படி மதுரை வடக்கில் 8.4 மி.மீ மழை பெய்துள்ளது. தல்லாகுளத்தில் 10 மி.மீ, பெரியபட்டியில் 9.4 மி.மீ, மதுரை கிழக்கு விரனூரில் 6.2 மி.மீ. மழை பெய்துள்ளது. மதுரை மேற்கில் சிட்டம்பட்டியில் அதிகளவாக 8 மி.மீ மழை பெய்துள்ளது. கள்ளிக்குடியில் அதிகபட்சம் 16.8 மி.மீ, மேலூர் தனியாமங்கலத்தில் 12.5 மி.மீ மேலூரில் 9.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இதேபோல் வாடிப்பட்டியில் அதிகளவாக 15 மி.மீ மழை பதிவாகியுள்ள நிலையில், சோழவந்தானில் 11 மி.மீ, உசிலம்பட்டியில் 5 மி.மீ, திருப்பரங்குன்றத்திற்கு உட்பட்ட விமானநிலையப் பகுதியில் 8.4 மி.மீ, திருமங்கலத்தில் 8.2 மிமீ மழை பெய்துள்ளது. எழுமலையில் குறைந்த அளவாக 2.8 மழை பெய்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடியில் மிக அதிகளவாக 16.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும், மதுரை மாவட்டத்தில் சராசரியாக 7.95 மி.மீ மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“