Advertisment

'தவறான தகவலை எடிட் செய்து பரப்பியுள்ளனர்': ஆண்ட பரம்பரை சர்ச்சை கருத்துக்கு அமைச்சர் மூர்த்தி விளக்கம்

"யாரோ வேண்டுமென்றே குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடிட் செய்து பரப்பியுள்ளனர். நான் ஆண்ட பரம்பரை என்று கூறியது, ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து ஆண்ட பரம்பரை என்று தான் குறிப்பிட்டேன்." என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madurai DMK Minister P Moorthy on his comment on The Ruling Class Aanda Parambarai Tamil News

"யாரோ வேண்டுமென்றே குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடிட் செய்து பரப்பியுள்ளனர். நான் ஆண்ட பரம்பரை என்று கூறியது, ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து ஆண்ட பரம்பரை என்று தான் குறிப்பிட்டேன்." என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, "ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், ஆண்ட பரம்பரை விவகாரம் தொடர்பாக அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். 

Advertisment

உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று அவனியாபுரம் திருப்பரங்குன்றம் செல்லும் சாலைகள் நடைபெற்றது. அதில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாநகராட்சி மேயர் இந்திரா ராணி பொன்வசந்தம் ஆணையாளர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேசுகையில், "சிலர் தவறான தகவலை எடிட் செய்து பரப்புகிறார்கள். நான் ஒரு அமைச்சர்; அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவான நபர். அன்று நடந்த நிகழ்ச்சியில், நீங்கள் தற்போது பின்தங்கியிருக்கிறீர்கள். இப்போது படித்து முன்னேறி வருகிறீர்கள். அரசுப் பதவிக்கு வரும் நீங்கள் அனைத்து சமுதாய மக்களையும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்றுதான் கூறினேன். அந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.

யாரோ வேண்டுமென்றே குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடிட் செய்து பரப்பியுள்ளனர். நான் ஆண்ட பரம்பரை என்று கூறியது, ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து ஆண்ட பரம்பரை என்று தான் குறிப்பிட்டேன். இது நேற்று நடந்தது இல்லை. சில மாதங்களுக்கு முன்பு நடந்ததை யாரோ வேண்டுமென்றே இப்போது பரப்புகிறார்கள்" என்று அவர் கூறினார்.

Dmk Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment