வீட்டுக்குச் சென்று பாஜக நிர்வாகியை தாக்க முயன்றாரா திமுக எம்எல்ஏ? வீடியோக் காட்சிகள்

பாஜக இளைஞரணி நிர்வாகி சங்கரபாண்டியனை, திமுக எம்.எல்.ஏ மூர்த்தி தாக்க முயன்ற வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

By: Updated: June 23, 2020, 08:30:24 AM

மதுரை ஊமச்சிக்குளம் பகுதியில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த மதுரை பாஜக இளைஞரணி நிர்வாகி சங்கரபாண்டியனை, திமுக எம்.எல்.ஏ மூர்த்தி தாக்க முயன்ற வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

பாஜக இளைஞரணி நிர்வாகியின் வீட்டிற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற மதுரை கிழக்குச் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ  சமூக ஊடகங்களில் தன்னைப் பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்புவது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம்  கைகலப்பாக மாறியது. ஒரு கட்டத்தில், எம்.எல்.ஏ மூர்த்தி  தனது காலணியை கழற்றி சங்கரபாண்டியனை தாக்க முயன்றார்.அனைத்து சம்பவங்களும், சங்கரபாண்டியன் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் வீடியோவாக பதிவாகியது.

எம்.எல்.ஏ வின் செய்த ஊழல்களை பாஜக நிர்வாகி சங்கரபாண்டியன் சமூக ஊடகங்களில் வெளிப்படையாக தெரிவித்து வந்தார். வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என்று தெரிந்தால், எம்.எல்.ஏ சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கலாம். மாறாக, வீட்டிற்கு சென்று தாக்குவது, தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது, கொலை மிரட்ட விடுப்பது எல்லாம் அதிகப்படியான செயல் என்று மதுரை பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், மாவட்ட காவல் கண்காளிப்பாரை சந்தித்து இதுதொடர்பான புகாரையும் பாஜக அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தன்மீது போடப்படும் குற்றச்சாட்டுகளை திமுக எம்.எல்.ஏ மூர்த்தி மறுத்துள்ளார். பாஜக இளைஞரணி நிர்வாகி லஞ்சம் வாங்கியாதாக பதிவு போடுகிறார். எந்த ஆதாரத்தோடு இந்த பதிவு போடப்படுகிறது என்பதனை நேரில் விசாரிக்கவோ அவரது வீட்டுக்கு சென்றேன். மற்றப்படி கொலை மிரட்டல் விடுத்தேன் என்று கூறுவது முற்றிலும் தவறு என்று தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Madurai dmk mla moorthy attacked bjp youth wing viral video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X