/indian-express-tamil/media/media_files/2025/05/26/Nspr5y58UI31b6w9IO8D.jpg)
48 ஆண்டுகளுக்குப் பிறகு, மதுரையில் தி.மு.க-வின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் வரும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, மதுரை உத்தங்குடியில் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
48 ஆண்டுகளுக்குப் பிறகு, மதுரையில் தி.மு.க-வின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் வரும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, மதுரை உத்தங்குடியில் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தி.மு.க பொதுக் குழுக் கூட்டம் பெரும்பாலும் சென்னையில் நடைபெறும் என்பது வழக்கம். ஆனால், கடந்த 1977-ஆம் ஆண்டு மதுரையில் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், 48 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் மதுரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மே 3-ஆம் தேதி நடைபெற்ற தி.மு.க மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
விரிவான ஏற்பாடுகள்
சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் விழா அரங்கில், 10,000 பேரை அமர்த்தக்கூடிய குளிர்சாதன வசதி கொண்ட கூட்ட அரங்கம், 100 பேர் அமரக்கூடிய மேடை, 2,000 பேருக்கும் அதிகமானோர் ஒரே நேரத்தில் உணவருந்தக்கூடிய உணவுக்கூடம் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விழா அரங்கத்தின் முன்பாக 100 அடி உயரத்தில் திமுக கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. கூடுதலாக, 'அறிவாலயம்' போல முகப்பு அமைக்கப்படும்.
பொதுக் குழு கூட்டத்தின் முக்கியத்துவம்
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் வெற்றிக்கான முதல்கட்ட வியூகம் வகுக்கப்படும் கூட்டமாக இது கருதப்படுகிறது. சமீபத்தில், தமிழக நிர்வாகத்தை 8 மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொன்றிற்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்கூட்டம், மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் என அனைத்து நிர்வாகிகளுக்கும் ஒருங்கிணைப்பை வலியுறுத்தும் வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. தற்போது நடைபெறும் ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், மதுரையில் ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ள இந்த பொதுக் குழுக் கூட்டம், தி.மு.க-வுக்கு முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.