/tamil-ie/media/media_files/uploads/2023/08/tamil-indian-express-2023-08-19T172037.458.jpg)
DMK hunger strike
தமிழகம் முழுவதும் தி.மு.க இளைஞரணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் நாளை ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ளது. இந்த நிலையில், மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா நடராஜ் தியேட்டர் அருகே நாளை நடைபெறவிருந்த தி.மு.க உண்ணாவிரத போராட்டம் வருகிற 23-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதான எதிர்க்கட்சி மாநாடு நடத்துவதால், ஜனநாயகத்தைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்படுவதாக தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எழுச்சி மாநாடு நாளை நடைபெற உள்ளது. இதனையடுத்து, தி.மு.க.-வின் உண்ணாவிரத போராட்ட தேதி மாற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.