மதுரையில் இருந்து துபாய் புறப்பட விமானம் தொழில்நுட்பக் கோளாறு: பயணிகள் அவதி

மதுரையில் இருந்து துபாய் புறப்பட இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான நிலையத்துக்குள் மீண்டும் திருப்பி அழைத்துச் செல்லப்பட்டதால் பயணிகள் கடும் அவதியுற்றனர்.

மதுரையில் இருந்து துபாய் புறப்பட இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான நிலையத்துக்குள் மீண்டும் திருப்பி அழைத்துச் செல்லப்பட்டதால் பயணிகள் கடும் அவதியுற்றனர்.

author-image
WebDesk
New Update
Madurai Dubai flight Passengers suffer engine malfunction Tamil News

மதுரையில் இருந்து துபாய் புறப்பட இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அவதியுற்றனர்.

இன்று வியாழக்கிழமை காலை 5 மணிக்கு துபாயிலிருந்து புறப்பட வேண்டிய விமானம் தாமதமாக காலை 6.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தது. பின்னர் மதுரையிலிருந்து 12.20 மணிக்கு துபாய் புறப்பட திட்டமிடப்பட்டிருந்த அந்த விமானம், 130 பயணிகளுடன் ஓடுதளத்தில் புறப்பட தயாரான போது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

Advertisment

இதையடுத்து விமானம் மீண்டும் விமான நிலையத்துக்குள் கொண்டு செல்லப்பட்டு, பயணிகள் கீழிறக்கப்பட்டனர். தற்போது பயணிகள் விமான நிலைய வளாகத்திலேயே காத்திருக்கின்றனர். கோளாறு சரிசெய்யப்பட்டதும் விமானம் புறப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் முதியோர் மற்றும் குழந்தைகள் பெரிதும் அவதிப்படுவதாகவும், ஸ்பைஸ் ஜெட் விமானங்களில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு தாமதம் நிகழ்வதால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: