மதுரையில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை : போலீஸ் அதிரடி வேட்டை

மதுரையில் 2 ரவுடிகள் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்ய போலீஸ் முயன்றபோது மோதல் ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை!

Hyderabad rape and murder, telangana police encounter
Hyderabad rape and murder, telangana police encounter

மதுரையில் 2 ரவுடிகள் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்ய போலீஸ் முயன்றபோது மோதல் ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை!

மதுரையில் சற்றே அடங்கியிருந்த ரவுடிகள், மீண்டும் அட்டகாசத்தை ஆரம்பித்துவிட்டதாக போலீஸாருக்கு தகவல்கள் வந்தன. அவர்களை ஒழிக்க மாநர போலீசார் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இன்று மதுரையில் உள்ள ரவுடிகளை பிடிக்க மாநகர போலீசார் அதிரடி வேட்டை நடத்தினர்.

மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியில் ரவுடிகள் சிலரை சுற்றி வளைத்து போலீஸார் கைது செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் – ரவுடிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து போலீசார் என்கவுண்டர் நடத்தினர். இதில் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகிய இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மற்றொரு ரவுடி தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. என்கவுண்டரில் பலியானவர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த திடீர் என்கவுண்டர் நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Madurai encounter 2 rowdies

Next Story
பிளவுபட்ட அதிமுக-வை இணைக்க முயற்சி… நாளை மறுநாள் இரு அணிகளும் பேச்சுவார்த்தை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com