மதுரை அரசரடி பகுதியில் ஏரோசா மருத்துவமனை என்ற பெயரில் ராணி என்பவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
அப்போது ராணி சிகிச்சை கொடுத்தபோது அவரின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த சந்தோஷ்குமார் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவர் செல்வராஜ்க்கு புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் மருத்துவமனையில் சோதனை செய்தபோது ராணி 10ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்ததும், உரிய ஆவணங்களின்றி மருத்துவராக பணியாற்றியதும் தெரிய வந்துள்ளது.
மேலும் இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ். காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.