நாய்களின் அபய குரலுக்கும் செவிமெடுத்த தீயணைப்பு துறையினர் – மதுரை மக்கள் பாராட்டு

ஒருவேளை குளத்திற்குள் யாரேனும் தவறி விழுந்திருக்கலாம் என்று எண்ணிய தீயணைப்பு துறையினர் தெப்பக்குளத்தின் கரையோரமாக தேடினார்கள்

By: Updated: June 15, 2020, 05:16:35 PM

Madurai fire department extended helping hands to dogs too : மதுரை தெப்பக்குளத்தில் அமைந்திருக்கும் மைய மண்டபத்தை நோக்கி தெரு நாய்கள் வெகு நேரமாக குரைத்துக் கொண்டிருந்தன. ஏதோ அபாயம் நிகழ்ந்துள்ளது என்று யூகித்த மதுரை தீயணைப்பு துறையினர் உடனடியாக பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்புத் துறை வீரர்கள் 5 பேர் தெப்பக்குளத்தில் படகு உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நாய்களுக்கு மோப்ப சக்தி மிக அதிகம். மேலும் அனைவருக்கும் உதவும் இதன் பாங்கினையும் நாம் அனைவரும் அறிந்ததே. ஒருவேளை குளத்திற்குள் யாரேனும் தவறி விழுந்திருக்கலாம் என்று எண்ணிய தீயணைப்பு துறையினர் தெப்பக்குளத்தின் கரையோரமாக தேடினார்கள். ஏதும் தென்படாத நிலையில் மைய மண்டபம் வரை தேடிச் சென்று திரும்பி வந்தனர்.

நாய்கள் அல்லது நாய்க்குட்டிகள் ஏதேனும் தவறி உள்ளே விழுந்திருக்கலாம் அல்லது மைய மண்டபத்திற்குள் சிக்கியிருக்கலாம். அவைகளுக்கு உதவுவதற்காகவும் கூட நாய்கள் குரைத்திருக்க கூடும் என்றும் தீயணைப்பு துறையினர் கூறினர். நாய்கள் தானே என்று அலட்சியம் காட்டாமல் உடனே பணியில் இறங்கிய தீயணைப்பு துறையினரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Madurai fire department extended helping hands to dogs too

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X