Madurai Malligai today rate in tamil: மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டம் மட்டுமன்றி ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. நாள்தோறும் சராசரியாக 50 டன்னுக்கும் மேலாக இங்கு பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மல்லிகை விலை இன்று கிலோ ரூ.1,500க்கு விற்பனை செய்யப்பட்டது. பிற பூக்களின் விலை நிலவரம் பின்வருமாறு: முல்லை ரூ.1,200, பிச்சி ரூ.1,000, கனகாம்பரம் ரூ.1,500, அரளி ரூ.150, செவ்வந்தி ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.150, சம்பங்கி ரூ.100, செண்டுமல்லி ரூ.80, கோழிக் கொண்டை ரூ.70, தாமரை ஒன்றுக்கு ரூ.10, மரிக்கொழுந்து ரூ.120 என விற்பனை செய்யப்படுகிறது.

மாட்டுத்தாவணி சில்லறை பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை நிலவரம் அடுத்த ஊரில் நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
தீபாவளியை முன்னிட்டு எகிறிய மதுரை மல்லிகை விலை: கிலோ ரூ.1500க்கு விற்பனை!https://t.co/gkgoZMIuaK | #madurai pic.twitter.com/X6Xin8EpD7
— Indian Express Tamil (@IeTamil) October 24, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil