scorecardresearch

வீடியோ: ஆவின் பாலில் இறந்த நிலையில் ஈ… பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

Fly Insects died in Aavin’s milk near Madurai Tamil News: மதுரை ஆவின் மூலமாக விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் ஈ இருந்ததால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

Madurai: Fly Insects died in Aavin's milk, customer shocked and realised video
Madurai: Fly died in Aavin's milk

madurai news today in tamil: மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் விற்கப்பட்ட பாலில் ஈ இருந்ததால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தார். ஈ இருப்பதை அவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அந்த பால் பாக்கெட் பாலகத்தில் திரும்ப பெறப்பட்டது.

இது குறித்து ஆவின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, பேக்கிங் செய்யும்போது தவறு நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

ரூ.10 ஆயிரம் அபராதம்

ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்த நிலையில் பால் பாக்கெட் செய்யும் ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Madurai fly insects died in aavins milk customer shocked and realised video

Best of Express