Advertisment

மதுரையிலும் கஞ்சா: வீடியோவை பகிர்ந்து தி.மு.க அரசை தாக்கிய அண்ணாமலை

"தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் போதைப்பொருள் எளிதாகக் கிடைக்கிறது." என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Madurai ganja youths attack man TN BJP Chief Annamalai share video Tamil News

"தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தால் தினம் தினம்குற்றச்செயல்கள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன." என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Annamalai | Madurai: மதுரையில் சித்திரை திருவிழா பெரும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்த விழாவிற்காக நகர் முழுதும் சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், மதுரை முழுதும் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மோதலில் சுமார் 23 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

Advertisment

இந்நிலையில், மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் கான் முகமது என்பவர் இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த சிலர் இளைஞர்கள் கஞ்சா போதையில் அவரை அடித்து காயப்படுத்தியுள்ளனர்.

படுகாயம் அடைந்த கான் முகமது தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், அந்த  இளைஞர்கள் அந்த பகுதியில் உள்ள இரண்டு கடைகளையும் அடித்து நொறுக்கி ரகளை ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த இளைஞர்கள் மீது 3 வழக்குகளை ஒத்தக்கடை காவல்துறையினர் பதிவு செய்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

அண்ணாமலை கண்டனம் 

இந்த நிலையில், இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துளள பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, "தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் போதைப்பொருள் எளிதாகக் கிடைக்கிறது. போதைப்பொருள் வியாபாரிகளுக்கு தி.மு.க-வில் பதவிகள் வழங்கப்படுகின்றன. இது சட்ட ஒழுங்கை கேலி கூத்தாக்குகிறது.  

மதுரையில் அப்பாவி பைக் ஓட்டி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம், கடந்த சில நாட்களில் தமிழகத்தில் நடந்த 4வது சம்பவம். “கஞ்சா” போதையில் கொடூரமான தாக்குதல்கள் நடந்துள்ளன. முதல்வர் ஸ்டாலின் எப்போது விழித்துக்கொள்வார்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இது தொடர்பான சி.சி.டி.வி காட்சியையும் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  

போதைப் பொருள் புழக்கம் அண்ணாமலை நேற்று திங்கள்கிழமை தனது எக்ஸ் வலைதள பதிவில், "தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தால் தினம் தினம்குற்றச்செயல்கள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன. சென்னையில் கஞ்சா வியாபாரிகள் காவல்துறையினரை தாக்கியது, கும்பகோணம் அருகே இளைஞர்கள் கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியது, தேனியில் கஞ்சா போதையில் மனைவி, மாமனாரை தாக்கிய நபர் என கடந்த 3 நாட்களில் நடந்த சம்பவங்கள் பொதுமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் தமிழகம் கஞ்சா தலைநகரமாக மாறி இருக்கிறது. காவல்துறைக்கு கஞ்சா கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யார் என்று தெரியாதா? ஏன் கஞ்சா புழக்கத்தை முழுவதுமாக தடுக்க முடியவில்லை. இதுவரை எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்காமல் திமுக அரசு இருப்பது மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது." என்று பதிவிட்டிருந்தார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Madurai Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment