Advertisment

மதுரையில் தீயணைப்புப் பணியில் 2 வீரர்கள் மரணம்: குடும்பத்திற்கு அரசு வேலை, தலா ரூ25 லட்சம் அறிவிப்பு

மதுரை தெற்கு மாசி வீதியில் ஜவுளிக் கடையில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு தீயணைப்பாளர்கள் உயிரிழந்தனர்.

author-image
WebDesk
New Update
மதுரையில் தீயணைப்புப் பணியில் 2 வீரர்கள் மரணம்: குடும்பத்திற்கு அரசு வேலை, தலா ரூ25 லட்சம் அறிவிப்பு

மதுரை தெற்கு மாசி வீதியில் ஜவுளிக் கடையில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது காயமடைந்த தீயணைப்பு வீரர்கள் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

Advertisment

தீ விபத்து காரணமாக கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்த போது, அங்கு தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டு தீயணைப்பு வீரர்கள் காயங்கள் காரணமாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மதுரை தெற்கு வட்டம், தல்லாகுளம், நவபத்கானா தெருவில் அமைந்துள்ள துணிக்கடை  ஒன்றில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அனுப்பானடி, திடீர் நகர் ஆகிய தீயணைப்பு  நிலையங்களில் இருந்து நான்கு தீயணைப்பாளர்கள் உடனடியாக சம்பவ இடத்தை அடைந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அப்பகுதியில் உள்ள பழைய கட்டிடத்தின் முதல் தளத்தில் செயல்பட்டு வந்த துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீயணைப்பாளர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்த போது  கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிவராஜன் மீது விழுந்ததாகவும்  கூறப்படுகிறது. கட்டிட இடர்பாடுகளில் சிக்கிய இருவரும்  காலை 5 மணி ஆளவில் தான் தான் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முதல்வர் இரங்கல்:

தீயணைப்பாளர்கள் இருவர் துரதர்ஷ்டவசமாக உயிரிழந்தனர் என்ற செய்தியை  அறிந்து துயரடைந்தாதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கடமையாற்றும் போது உயிரிழந்த தீயணைப்பாளர்கள் சிவராஜ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரின் கடமை உணர்வையும், தியாகத்தையும் பாராட்டி அவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்தும், 15 லட்சம் ரூபாய் அரசு நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 25 லட்சம் ரூபாயும்; அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கவும் உத்தரவிடுவதாக முதல்வர் தெரிவித்தார்.

மேலும், காயமடைந்த தீயணைப்பாளர்கள்  கல்யாணகுமார் மற்றும் சின்னக்கருப்பு ஆகியோருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் அரசு நிதியிலிருந்தும் வழங்கவும், அவர்களுக்கான மருத்துவ செலவை அரசே ஏற்கும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

மு. க  ஸ்டாலின் இரங்கல்:   மதுரை, ஜவுளிக்கடை தீ விபத்தில் போராடி உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்; அனுதாபங்கள். வீரர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இரு குடும்பத்தினருக்கும் தமிழக அரசு தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Tamilnadu Fire Accident Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment