வைரமுருகன்-சௌமியா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஜனவரி 31-ஆம் தேதி மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி அந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறி வீட்டின் அருகிலேயே அக்குழந்தை புதைக்கப்பட்டிருக்கிறது. குழந்தையின் இறப்பு குறித்து அக்கம் பக்கத்தினர் சந்தேகம் எழுப்பவே கிராம நிர்வாக அதிகாரி புகார் அளித்திருக்கிறார்.
ஸ்டாலின் மீதான அவதூறு வழக்குகள் – தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி வட்டாட்சியர் செந்தாமரை, டி.எஸ்.பி. ராஜா தலைமையிலான குழுவினர் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தினர்.
இதில் பிறந்து 31 நாளே ஆன பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து பெற்றோரே கொன்றது அம்பலமானது. இதனை அடுத்து வைரமுருகன்-சௌமியா மற்றும் வைரமுருகனின் தந்தை ஆகியோரை செக்காணூரணி போலீசார் கைது செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”