Advertisment

மதுரையில் 5 வருடங்களுக்குப் பிறகு 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி: தொடங்கிய சில நிமிடத்திலேயே நிறுத்தம்; ஏன்?

மதுரையில் 5 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை காண ஏராளமானவர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல். சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதுடன் மயக்கம் அடைந்தனர்.

author-image
WebDesk
New Update
Madurai.jpg

மதுரையில் 5 வருடங்களுக்குப் பிறகு மீண்டும்  அண்ணா நகர் பகுதியில் "WOW MADURAI" என்ற தலைப்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி இன்று(செப்.24) நடைபெற்றது.  மதுரை மாநகராட்சி சார்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Advertisment

இதில் மாநகராட்சி நிர்வாகம்  எதிர்பார்த்ததை விட இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் கூட்டம் அதிகமாக இருந்ததால் நிகழ்ச்சியில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி, தமிழக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனி தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி மேயர்,  ஆணையாளர் ஆகியோர் பங்கேற்றனர். 

madurai2.jpg

நிகழ்ச்சி தொடங்கும் முன்பே கூட்டம் அலைமோதியது. அனைவரும் மேடையை நோக்கி முண்டியடித்துக் கொண்டு சென்றனர். இதில் சிலர் பேரிக்கார்டை தாண்டி உள்ளே புகுந்ததால் கூட்ட நெரிசலில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதுடன் மயக்கம் அடைந்தனர். 

10.jpg

தொடர்ந்து காவல்துறையினர் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக, பாதுகாப்பு கருதி 108 ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதியும் ஏற்படுத்தவில்லை. இதையடுத்து நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியை பார்க்க ஆர்வமுடன் வந்த இளைஞர்கள், குடும்பத்தினர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

8.jpg

செய்தி: க. சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment