New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/01/Kg6v9hDJGrIj83kMblfb.jpeg)
மதுரை திருப்பரங்குன்றம் மலையை ட்ரோன் மூலம் அளவீடு செய்வது தொடர்பாக வரும் 24ஆம் தேதி முடிவு செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் மலையை ட்ரோன் மூலம் அளவீடு செய்வது தொடர்பாக வரும் 24ஆம் தேதி முடிவு செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
மதுரைவைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் கோயில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு புகழ்பெற்ற தலமாக விளங்குகிறது. இதன் தென்பகுதியில் உமையாண்டார் குகைக் கோயிலும், 11 தீர்த்தக் குளங்களும் அமைந்துள்ளன. இதன் அருகே உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில், கடந்த ஜனவரி மாதம் ஆடு, கோழி போன்றவை பலியிட்டு சமபந்தி உணவு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இது கோயில் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையை மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும், சமணர் குன்றாக அறிவிக்க வேண்டும், தர்காவுக்கு அடிப்படை வசதிகள் வழங்க வேண்டும், காவல் துறையினர் தர்கா புதுப்பிப்பு பணிக்கு இடையூறு செய்யக் கூடாது, நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தக் கூடாது என பலரும் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் ஆஜராகிய வழக்குரைஞர், திருப்பரங்குன்றம் மலையின் பரப்பளவை அளவிட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரியிருப்பதாகவும், ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இதனை கருத்தில் கொண்டு, மனுதாரர்கள் எழுத்துப்பூர்வ மனுக்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்குகளின் விசாரணையை மார்ச் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அந்த நாளில் திருப்பரங்குன்றம் மலையை ட்ரோன் மூலம் அளவீடு செய்வதற்கான அனுமதி வழங்குமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.