/tamil-ie/media/media_files/uploads/2022/07/tamil-indian-express-2022-07-06T112526.116-1.jpg)
Justice GR Swaminathan of the MadrasHighCourt Madurai Bench has directed the Registry of the Court to initiate suo motu contempt proceedings against Savukku Shankar Tamil News
Savukku Shankar Tamil News: தமிழக லஞ்ச ஒழிப்பு துறையில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரி, தற்போது சவுக்கு இணையதளத்தை நடத்தி வருபவர் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர். சமூக வலைதளங்களில் பிரபலமாக வலம் வரும் இவர், தனது இணையபக்கம், ட்விட்டர் பக்கம் மற்றும் பல்வேறு யூட்யூப் சேனல்களில் அன்றாட அரசியல் நிகழ்வு குறித்து காரசாரமாக பேசி வருகிறார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பரபரப்பான கருத்துக்களை முன்வைத்து வருகிறார். அவரது பேச்சுகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சவுக்கு சங்கர் நீதித்துறையின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்தும், காவல்துறையில் பின்பற்றப்படும் ஆர்டலி முறை பற்றியும் கடுமையான விமர்சனங்களை சமீபத்தில் முன்வைத்து இருந்தார். அதன் தொடர்ச்சியாக அவரது ட்விட்டர் பக்கம் ட்விட்டர் நிர்வாகத்தால் முடக்கப்பட்டது. தற்போது அவர் வேறு ஒரு ட்விட்டர் கணக்கின் மூலம் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/tamil-indian-express-2022-07-06T111400.237.jpg)
இந்நிலையில், சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய மதுரைக்கிளை பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ள, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தன்னைப் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட குற்றச்சாட்டில், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்வதாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பதிவில், "அய்யா எதுவா இருந்தாலும் என் கிட்டயே கேக்கலாம். கோர்ட்டில் பேச வேண்டாம். மாரிதாஸ் வழக்கு விசாரிக்கும்போது, ஒரு நாள் காலை 6 மணிக்கு அழகர் கோவிலில் யாரை சந்தித்தீர்கள் ?" என்று கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அய்யா எதுவா இருந்தாலும் என் கிட்டயே கேக்கலாம். கோர்ட்டில் பேச வேண்டாம்.
மாரிதாஸ் வழக்கு விசாரிக்கும்போது, ஒரு நாள் காலை 6 மணிக்கு அழகர் கோவிலில் யாரை சந்தித்தீர்கள் ? @LiveLawIndiapic.twitter.com/KA6nAWDFnl— Savukku Shankar (@Veera284) July 18, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.