arjun-sampath | madurai-high-court | திருச்சி ஸ்ரீரங்கம் அருகில் பெரியார் சிலை அமைந்துள்ளது. இந்தச் சிலையை அகற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றன.
இந்தச் சிலை 2006ஆம் ஆண்டு சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியை சேர்ந்த அர்ஜூன் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் இன்று (நவ.29) விசாரணைக்கு வந்தது. அப்போது தன் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என அர்ஜூன் சம்பத் கோரியிருந்தார்.
இந்த நிலையில் அர்ஜூன் சம்பத் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கூடாது என திமுக தலைமையிலான தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கிடையில் அர்ஜூன் சம்பத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 3 வாரங்களுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையில் உள்ள வாசகங்களை அகற்ற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இதற்கு திமுக காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“