/indian-express-tamil/media/media_files/7017RXTHTKag3HvZaQAQ.jpg)
சூறைக் காற்றுடன் பெய்த கன மழையால் மதுரையில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. | புகைப்படங்கள்: சக்தி சரவணன் - மதுரை
/indian-express-tamil/media/media_files/GFx1Vhhoxe11gpGLiEmY.jpg)
மதுரையில் காலை முதலே வெயிலும் மேகமூட்டமாக காணப்பட்டு வந்தது, இந்த சூழலில் மாலை 5 மணி அளவில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பொழிந்தது. | புகைப்படங்கள்: சக்தி சரவணன் - மதுரை
/indian-express-tamil/media/media_files/tQkSXYMR7vMvWWwwQFrd.jpg)
சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் மதுரை நகரில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து, மின் கம்பங்கள் கடும் சேதம் அடைந்தது. | புகைப்படங்கள்: சக்தி சரவணன் - மதுரை
/indian-express-tamil/media/media_files/lp3HbPfjSgX4QtKUlFdn.jpg)
மதுரை நகரின் முக்கிய விதிகளான காமராஜர் சாலை தெற்கு வாசல் பெரியார் பேருந்து நிலையம் கீழவாசல் சிம்மக்கல் போன்ற பகுதிகளில் மழை நீர் அதிக அளவில் தேங்கியதால் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றது. | புகைப்படங்கள்: சக்தி சரவணன் - மதுரை.
/indian-express-tamil/media/media_files/tNaYD67fyH4w9YUZynHB.jpg)
மதுரை தெற்கு வாசல் பகுதியில் பழமையான மரம் ஒன்று விழுந்ததில் டிரான்ஸ்பாரம் மின் கம்பங்கள் சேதம் அடைந்தன இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. | | புகைப்படங்கள்: சக்தி சரவணன் - மதுரை.
/indian-express-tamil/media/media_files/1eeEH8XKn9HaQMpW7f1B.jpg)
விழுந்த மரம் மற்றும் அறுந்து விழுந்த மின்வட கம்பிகள் ட்ரான்ஸ்பர பாகங்கள் மின் கம்பங்கள் ஆகியவற்றை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையுடன் மாநகராட்சி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். உயிர் சேதம் ஏதும் இல்லை. | | புகைப்படங்கள்: சக்தி சரவணன் - மதுரை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.