ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு: மதுரை ஐகோர்ட் கிளை கருத்து
ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Advertisment
சென்னையைச் சேர்ந்த சூரியப்பிரகாசம் என்பவர் விவசாயிகளிடமிருந்து நெல்லை விரைவாக பெறுவதற்கு நெல் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். நெல்லை பாதுகாப்பதற்கான வசதிகளை செய்ய வேண்டும் என்று கோரி ஒரு மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்தார். அவர் மேலும் அந்த மனுவில், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகளைக் கொண்டு வரும் விவசாயிகளிடம் அதிகாரிகள் ஒரு மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் வாங்குகிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது, தமிழக அரசு சார்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 8 குழுக்கள் அமைத்து தமிழக முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில் 1825 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முறைகேட்டில் ஈடுபட்ட 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
Advertisment
Advertisements
இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெறவில்லை. அதிகாரிகள் லஞ்சம் பெறுகிறார்கள் என்ற கருத்து பொய்யானது என்று தமிழக அரசின் பதில் மனுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு நீதிபதிகள், முறைகேட்டில் ஈடுபட்ட 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் லஞ்சம் பெறுவது எப்படி பொய்யானதாக இருக்கும் என்று கேள்வி எழுப்பினர். இது போன்ற தவறான தகவல்களை நீதிமன்றத்தில் அளிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்கள். மேலும் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.
மேலும், நீதிபதிகள், ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்படி தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரிசெய்யப்படும். மேலும், அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த கருத்து பொருந்தாது. நீதிமன்றம் அனைத்து அதிகாரிகளை கருத்தில் கொண்டு இந்த கருத்தை பதிவு செய்யவில்லை. லஞ்சம் பெற்று ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளை கண்டித்து இந்த கருத்தை பதிவு செய்கிறோம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நிர்வாக நீதிபதி கிருபாகரன் நீதிபதி புகழேந்தி அமர்வு தெரிவித்திருக்கிறது.
மேலும், நீதிபதிகள் கூறுகையில் நமது நாட்டில் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டு இருக்கிறது. விவசாயம் அனாதை ஆக்கப்பட்டுவிட்டது என கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"