Advertisment

தொடர் குற்றவாளிகளுடன் முதல்முறை குற்றம் புரிந்தவர்களை அடைக்கக் கூடாது - ஐகோர்ட் கருத்து

சிறு வழக்கில் சிறை செல்வோர் அங்கே உள்ள மொத்த கஞ்சா வியாபாரியிடம் பழகி பெரிய குற்றவாளி ஆகிவிடுகிறார்கள். இதன் காரணமாக கடும் குற்றம் புரிந்த விசாரணை கைதிகளுடன் முதல்முறை கைதியை அடைக்க கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Madurai High Court judge verdict in Palani Thirumanjana fee collection issue

கடும் குற்றம் புரிந்த விசாரணை கைதிகளுடன் முதல்முறை கைதியை அடைக்க கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

சிறு வழக்கில் சிறை செல்வோர் அங்கே உள்ள மொத்த கஞ்சா வியாபாரியிடம் பழகி பெரிய குற்றவாளி ஆகிவிடுகிறார்கள். இதன் காரணமாக கடும் குற்றம் புரிந்த விசாரணை கைதிகளுடன் முதல்முறை கைதியை அடைக்க கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

Advertisment

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி, ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை வியாழக்கிழமை (செப்.5) வழக்கம் போல் விசாரித்து வந்தார். அப்போது, கடந்த மாதம் ஜாமீனில் வெளியே சென்றவர்கள் இப்போது கஞ்சா வழக்கில் மீண்டும் கைதாகி ஜாமீன் மனு செய்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவர்களுக்கு கடந்த மாதம் ஜாமீன் தரப்பட்டது, மீண்டும் கைதாகியுள்ளனர் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

சிறையில் கஞ்சா வழக்கில் கைதானவர்களுடன் பழக்கம் ஏற்பட்டு குற்றச் செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது என்று காவல்துறை தரப்பில் நீதிபதியிடம் விளக்கம் அளித்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, “சிறை கைதிகளை ஒன்றாக வைக்கும் போது பழைய கைதிகளுடன் இணைந்து தொடர் குற்றவாளிகளாக மாறிவிடுகிறார்கள். சிறு வழக்கில் சிறை செல்வோர் அங்கே உள்ள மொத்த கஞ்சா வியாபாரியிடம் பழகி பெரிய குற்றவாளி ஆகிவிடுகிறார்கள். இதன் காரணமாக கடும் குற்றம் புரிந்த விசாரணை கைதிகளுடன் முதல்முறை கைதியை அடைக்க கூடாது.

முதல்முறை குற்றவாளிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி சிறை அமைக்க வேண்டும். முதல் முறை குற்றவாளிகளை சிறையில் தனியாக வைப்பதற்கு ஏதேனும் திட்டங்கள் உள்ளதா என்று சிறைத்துறை ஐ.ஜி-யிடம் விளக்கம் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madurai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment