/indian-express-tamil/media/media_files/2025/09/26/mhc-bomb-threat-2025-09-26-12-56-22.jpeg)
மதுரை ஐகோர்ட்டில் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள 14 மாவட்ட வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் விசாரிக்கப்படுகின்றன. இதனால் தினமும் பொதுமக்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என அதிகமானோர் வந்து செல்லும் நிலையில், இன்று காலை வழக்குகள் நடைபெற்று கொண்டிருந்தபோது ஐகோர்ட்டு அலுவலக மின்னஞ்சலுக்கு வளாகத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்ற தகவல் வந்தது.
அதிர்ச்சியடைந்த ஐகோர்ட்டு அலுவலர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நீதிபதிகள், வக்கீல்கள், பொதுமக்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் உதவியுடன் ஐகோர்ட்டு வளாகம், நீதிபதிகள் குடியிருப்புகள், நீதிமன்ற அரங்குகள் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சோதனையில் எதுவும் கிடைக்காததால், அது வெறும் புரளி எனத் தெரியவந்தது.
இந்த மிரட்டல் காரணமாக வழக்கு விசாரணைகள் சிறிது தாமதமாகத் தொடங்கின. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் அனுப்பியவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.