/tamil-ie/media/media_files/uploads/2022/12/Madurai-High-Court.jpg)
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றுசூழலை பாதிக்கும் வண்ணம் செயற்கை அருவிகள் உருவாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாத் துறை இயக்குநரின் தலைமையில் பத்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, மேற்கு தொடர்ச்சி மலையில் நீர் வழித்தடத்தை மாற்றி குற்றாலம் உள்பட பல்வேறு இடங்களில் செயற்கையான அருவிகளை உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முடிவெடுத்துள்ளனர்.
அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு வைத்து செயற்கை அருவிகளை உருவாக்கிய ரிசார்ட்களுக்கு சீல் வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அவர்களிடம், அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''உயர் நீதிமன்ற உத்தரவின்படி, நீர் வழித்தடத்தை மாற்றி செயற்கை அருவிகளை உருவாக்குவோர் மற்றும் உரிய அனுமதி பெறாமல் செயல்படும் ரிசார்ட்டுகள் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்க சுற்றுலாத் துறை இயக்குநர் தலைமையில் நில நிர்வாக ஆணையர், தலைமை வனக் காப்பாளர் உள்ளிட்ட பத்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள், ''நீதிமன்றம் உத்தரவிட்டதை ஏற்று உடனடியாக குழு அமைத்த தமிழக அரசின் நடவடிக்கையை நீதிமன்றம் பாராட்டுகிறது. செயற்கை அருவிகள் ஏற்படுத்தியவர்கள் மற்றும் அனுமதி இல்லாமல் தனியார் ரிசார்ட்டுகள் வைத்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும் விபரங்களை நாளை தெரிவிக்க வேண்டும்'' என உத்தரவிட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.