அனைத்து சமூகத்தினரும் வழிபாடு செய்ய முடியுமாறு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் ஆண்டார் கொட்டாரம் பகுதியில் அமைந்துள்ள கடவு காத்த அய்யனார் கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த கோயிலில், குறிப்பாக பட்டியலின சமூகத்தினர் வழிபாடு செய்வதை தடுப்பதற்கான முயற்சிகள் குறித்து வழக்கறிஞர் விவேகா சுரேஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், எந்த சமூகத்தினரும் கோயிலில் வழிபாடு செய்வதில் தடை விதிக்கக் கூடாது எனக் கூறியது. மேலும், யாரேனும் தடையில்லா தரிசனத்துக்கு எதிராக செயற்பட்டால், அவர்கள்மீது காவல்துறை சட்டப்படி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், கோயிலில் சாமி தரிசனம் செய்ய தடையின்றி அனைத்து பக்தர்களும் செல்ல காவல்துறை உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.