திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் தொல்லியல் துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரத்தைச் சேர்ந்த ஸ்வஸ்தி லட்சுமி சேன சுவாமி என்பவர், திருப்பரங்குன்றம் மலையை "சமணர் குன்று" என அறிவிக்க கோரிய மனுவை மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தப்போது, அரசு தரப்பு சார்பில் ஆஜராகிய அரசு வழக்கறிஞர், அரசு எந்த மதத்திற்கும் எதிராக இல்லையென்றும், மத நல்லிணக்கத்தையே ஆதரிக்கிறது என்பதையும் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, இந்த வழக்கை திருப்பரங்குன்றம் மலை தொடர்பான நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளுடன் இணைத்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும், இந்த மனுவிற்கு தமிழ்நாடு தொல்லியல் துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.