Advertisment

மதுரை ஏர்போர்ட் விரிவாக்க பணி: கிராம மக்கள் வெளியேற தடை விதித்து மதுரை ஐகோர்ட் உத்தரவு!

தொழிலக பயன்பாட்டிற்காக நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் போது மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு ஆகியவற்றை செய்து தர வேண்டும்.

author-image
WebDesk
New Update
Madurai Bench of Madras High Court questions over govt law college administration Tamil News

மதுரை விமான நிலையம் விரிவாக்கம் செய்வதற்காக சின்ன உடைப்பு கிராம மக்களிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு பதிலாக மறுவாழ்வு, மறுகுடியமர்வு வசதிகளை செய்து தர உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், சின்ன உடைப்பு பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு பகுதியை சேர்ந்த மலைராஜன், பெரியசாமி, சந்திரா உள்ளிட்ட 130 பேர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், "சின்ன உடைப்பு பகுதியில் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக 2009 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இழப்பீடு முடிவு செய்யப்பட்டு அனைத்து நண்பர்களுக்கும் இழப்பீடும் வழங்கப்பட்டு விட்டது.

ஆனால் மறு குடியமர்வு மற்றும் மறுவாழ்வு தொடர்பாக எவ்விதமான முறையான திட்டமும் எடுக்கப்படவில்லை. தொழிலக பயன்பாட்டிற்காக நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் போது மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு ஆகியவற்றை செய்து தர வேண்டும். 2013 ஆம் ஆண்டு கொணரப்பட்ட விதியும் இதனை உறுதி செய்கிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆனால் இப்பகுதி மக்களை வெளியேற்றும் நோக்கில் கனரக இயந்திரங்களும், காவல்துறையினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.  

ஆகவே மறுவாழ்வு, மறுகுடியமர்வு வசதிகளை செய்து தராமல், 1997 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் விதிகளை அமல்படுத்துவது செல்லாது" என உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியே கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், " தொழிலக பயன்பாட்டிற்கான நிலம் கையகப்படுத்துதல் விதிகளின் படி மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வு வசதிகளை செய்து தர வேண்டும்" என வாதிடப்பட்டது.

Advertisment
Advertisement

அரசுத்தரப்பில், " 2013ஆம் ஆண்டே அந்த விதி நடைமுறைக்கு வந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது. இழப்பீட்டுத் தொகையும் பெரும்பாலானவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது" என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், "வழக்கு தொடர்பாக தமிழக வருவாய் துறையின் முதன்மைச் செயலர், நில நிர்வாகப் பிரிவின் இயக்குனர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அதுவரை அப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்ற இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madurai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment