RSS rally in Tamil Nadu: கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்கக் கோரி ஆர்.எஸ்.எஸ் தரப்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க தமிழக காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், பேரணியால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை கிடைத்துள்ளது என்றும் விண்ணப்பத்தில் போதிய தகவல்கள் குறிப்பிடவில்லை” என்றும் காவல்துறை தரப்பில் குறிப்பிடப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோ, “உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளை பின்பற்றி அணிவகுப்பு நடத்தலாம் என்றும் சீருடை இல்லாமல் பேரணியில் யாரையும் அனுமதிக்கக்கூடாது” எனவும் உத்தரவிட்டார். ஆர்.எஸ்.எஸ் மனுவில், தமிழகத்தின் 33 இடங்களில் RSS அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த பேரணி அக்டோபர் 22 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“